நான் சிலீப்பர் செல் இல்லை! - திருச்சியில் கண் கலங்கிய அமைச்சர்

 ,
மதுரையில் நேற்று மருத்துவ முகாமைத் திறந்துவைத்த பின் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, `முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலாவின் உதவியோடு அ.தி.மு.க மீண்டும் ஆட்சி அமைத்தது. நாங்கள் நன்றி மறக்க மாட்டோம். ஆனால், அமைச்சர் என்ற பொறுப்பில் இருப்பதால் ஆட்சி தொடர என் விருப்பு வெறுப்புகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு பணியாற்றுகிறேன்’ என்று பேசியிருந்தார்..
அமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலா பற்றி திடீரென கனிவாகப் பேசியதைத் தொடர்ந்து ‘மனசாட்சி உள்ளவர் செல்லூர் ராஜூ’ என்று டி.டி.வி.தினகரன் பாராட்டிப் பேசினார். இதனால் தினகரன் அடிக்கடி கூறும் ’ஸ்லீப்பர் செல்’ செல்லூர் ராஜூதான் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் கூறிவருகின்றன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்லூர் ராஜூ, ‘எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் தினகரனின் ஸ்லீப்பர் செல் நான்தான் என்று கூறுகின்றனர். அப்படி எதுவும் இல்லை’ என்று கண்கலங்கிக் கூறியிருக்கிறார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று பேட்டியளித்த செல்லூர் ராஜூ, `அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைய சசிகலா உதவி புரிந்தார் என என்னுடைய மனசாட்சியின்படியே கூறினேன். இந்தக் கருத்தை அரசியலாக்கிவிட்டார்கள். நான் ஸ்லீப்பர் செல் இல்லை’ என்று கண் கலங்கிய நிலையில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ, சசிகலா பற்றி திடீரென கனிவாகப் பேசியதைத் தொடர்ந்து ‘மனசாட்சி உள்ளவர் செல்லூர் ராஜூ’ என்று டி.டி.வி.தினகரன் பாராட்டிப் பேசினார். இதனால் தினகரன் அடிக்கடி கூறும் ’ஸ்லீப்பர் செல்’ செல்லூர் ராஜூதான் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் கூறிவருகின்றன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செல்லூர் ராஜூ, ‘எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் தினகரனின் ஸ்லீப்பர் செல் நான்தான் என்று கூறுகின்றனர். அப்படி எதுவும் இல்லை’ என்று கண்கலங்கிக் கூறியிருக்கிறார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று பேட்டியளித்த செல்லூர் ராஜூ, `அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைய சசிகலா உதவி புரிந்தார் என என்னுடைய மனசாட்சியின்படியே கூறினேன். இந்தக் கருத்தை அரசியலாக்கிவிட்டார்கள். நான் ஸ்லீப்பர் செல் இல்லை’ என்று கண் கலங்கிய நிலையில் தெரிவித்துள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.