Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நான் அரசியல்வாதி அல்ல, சமுதாயப் போராளி - கருணாஸ் ஆக்ரோஷ பதில்..!

On October 1, 2018
karunas
Share

அமைச்சர் ஜெயக்குமாருக்கு எம்எல்ஏ கருணாஸ் ஆக்ரோஷமாக பதிலளித்துள்ளார்.

நான் லொடுக்கு பாண்டிதான். நான் கஷ்டப்பட்டுதான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்.நான் கீழே இருந்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். ஒரு அமைப்பை தொடங்கி எம்எல்ஏவாக வந்துள்ளேன்.

நேற்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்காக எத்தனை பேனர்கள் வைத்திருந்தனர்? அனுமதி பெற்றா பேனர் வைத்திருந்தார்கள் ? இதற்காக காவல்துறையினர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மீது வழக்கு போடுங்கள்.

கண்டிக்கிறோம் என நாங்கள் போஸ்டர் ஒட்டினால் உடனே வழக்குப்போடுகிறார்கள். வலியவனுக்கு ஒரு சட்டம், எளியவனுக்கு ஒரு சட்டமா?

நீதிமன்றம் உங்களை கவனித்துக் கொண்டுதான் உள்ளது. நீதித்துறை உங்களுக்கு சரியான நேரத்தில் தக்க பாடம் புகட்டும். நாங்கள் நீதித்துறையை மதிப்பவர்கள். தமிழக மக்கள் உங்களை பார்த்து சிரிக்கிறார்கள்.

ஜெயலலிதா இருந்த போது எப்படி இருந்தவர்கள், இப்போது எப்படி பேசுகிறார்கள், நடந்துகொள்கிறார்கள் என மக்கள் கவனிக்கிறார்கள்.

முக்குலத்தோர் புலிப்படையினரை கையை உடைப்பேன் காலை உடைப்பேன் என மிரட்டினால் சும்மா இருக்க மாட்டோம். நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன். வார்த்தையை அளந்து பேசுங்கள்.

நான் போராளி, அரசியல்வாதி அல்ல. சமுதாயப் போராளி நான். இன்று சிவாஜி கணேசன் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. சிவாஜிகணேசன் சிலையை சென்னையில் முக்கிய வீதியில் நிறுவ வேண்டும். இவ்வாறு கருணாஸ் எம்எல்ஏ ஆக்ரோஷமாக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.