Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நானா படேகர் ரஜினிக்கு அறிவுரை

On January 22, 2018
nana
Share
nana ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தில் அவருடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் நானா படேகர். இவர் ஏற்கனவே பாரதிராஜா இயக்கிய பொம்மலாட்டம் படத்தில் நடித்தவர். வட நாட்டில் கிராமம் ஒன்றை தத்தெடுத்து விவசாய குடும்பங்களின் கடன்களை அடைப்பது மற்றும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்வது என நற்பணியாற்றி வருகிறார். சம்பாதித்த பணம் முற்றிலுமாக உதவிக்கு சென்றபோதும் சிறிய வீட்டில் தனது தாயுடன் தங்கிக்கொண்டு மற்ற சொத்துக்களையும் விற்று விவசாயிகளுக்காக உதவி செய்வதாக பாலிவுட் பத்திரிகைகள் நானா படேகருக்கு புகழராம் சூட்டி உள்ளன. ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து நானா படேகர் கருத்து தெரிவித்துள்ளார். ரஜினிக்கு அரசியல் தேவையற்றது. நல்ல இதயம் கொண்டிருப்பது மட்டுமே அரசியலில் போதுமான வெற்றியை பெற்றுத்தந்துவிடாது. ரஜினி எளிமை மற்றும் நேர்மையான குணம் கொண்டவர். அப்படிப்பட்டவர்கள் அரசியலில் தாக்குபிடிப்பது கடினம். மக்களிடம் தந்திரமாக பேச தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அதை ரஜினி செய்வாரா என்பது சந்தேகமே. எனவே அவருக்கு அரசியல் ஒத்துவராது என்பது என் கருத்து’ என்றார் நானா படேகர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.