Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'நாச்சியார்' படத்தில் ஜோதிகா போலீஸ் அதிகாரியா ?

On August 3, 2017
nachiyaar_3138585f (1)
Share
nachiyaar_3138585f (1) தாரை தப்பட்டை படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கும் படம் நாச்சியார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ், ஜோதிகா ஆகியோர் நடிக்கின்றனர். சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. naachi சூர்யா வெளியிட்ட இந்த போஸ்டரில் ஜோதிகா கோபமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி வருகிறது. இதனை வைத்து பார்க்கும் பொழுது, ஜோதிகா காவல் துறை அதிகாரியாகவும், ஜிவி பிரகாஷ் கிரிமினலாகவும் நடிப்பது போன்று தோன்றுகிறது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைப்பதன் மூலமாகவும், பாலா மற்றும் இளையராஜா இருவரும் 5வது முறையாக இணைந்துள்ளனர். இப்படத்தை பாலாவின் தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மற்றும் ஈஓஎன் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு முன்னதாக ஜோதிகா நடித்துள்ள “மகளிர் மட்டும்” படம் வரும் 11ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக இப்படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?v=SKSzEPKDCjQ

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.