நடிகையின் பாவாடை ஏன் பறக்கல! அப்போலோவில் என்ன?? கிண்டலடிக்கும் ரஜினியின் உதவியாளர் மீது நடவடிக்கை பாயுமா?

நடிகர் ரஜினியின் குடும்பத்தினரின் உதவியாளர், தனுஷ், விஜய் மற்றும் பலருக்கு மக்கள் தொடர்பாளராக(PRO) இருப்பவர் ரியாஸ் கே அஹ்மத். இவர் ஆரம்பத்தில், பல வருடங்களுக்கு முன்னர் ரஜினியின் ரசிகனாக வளம் வந்தவர். ஒரு கட்டத்தில் சென்னை திருவேளிகனியில் உள்ள ரஜினி ரசிகர் மன்றத்தில் இணை செயலாளராக பணியாற்றியுள்ளார். பின்னர், இன்று பிரபலமாக இருக்கும் ஒரு படத்தயாரிப்பாளர் அலுவலகத்தில் அன்று அலுவலக உதவியாளராக பணிபுரிந்தார். 1993ல் ரஜினி தயாரித்த 'வள்ளி' திரைப்படத்தில் மக்கள் தொடர்பு பணியை மேற்கொண்டுள்ளார். பின்னர் ரஜினி குடும்பத்துடன் சற்று நெருக்கமானார்(உதவியாளராக).
இப்படி ரஜினி குடும்பத்தில் உதவியாளராக பணிபுரிந்த ரியாஸ் பின்னர் ரஜினி மருமகன் தனுஷ், மகள்கள் ஐஸ்வரியா மற்றும் சவுந்தர்யா ஆகியோருக்கு மக்கள் தொடர்பாளராகவும் ஆகினார். சொல்லப்போனால் ரஜினியோ அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மீது எந்த கான்றாவெர்சி செய்தி வந்தாலும் தக...திமி...தா ஆடுவார். சில சந்தர்பங்களில் செய்தி போட்ட அந்த பத்திரிக்கையாளர்களையும் மிரட்டியுள்ளார். எல்லாம், தான் ரஜினி குடும்பத்தின் உதவியாளர் மற்றும் பி.ஆர்.ஓ என்ற ஆணவம் தான் என்று சிலர் சொல்கிறார்கள்.
ரியாஸ் கே அஹ்மத் நேற்று அவருடைய முகநூல்(Facebook) பக்கத்தில் ஒரு சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டிருந்தார். அந்த பதிவு உங்கள் பார்வைக்காக கிழே உள்ளது:
#சுவாதியை கொன்றது யாருன்னு தெரியல..
#ரெயில்ல இருந்து பணம் எப்படி திருடு போச்சுன்னு தெரியல..
#ராம் குமார் எப்படி இறந்தான்னு தெரியல
#வேந்தர் மூவி மதன் எங்கிருக்காருன்னு தெரியல..
#அடுத்த போகத்துக்கு காவேரில தண்ணீ வருமான்னு தெரியல.
#கோவையில பிரியாணிய திருடினது யார் என்று தெரியல..
#அப்பலோவில என்ன நடக்குதுன்னு தெரியல..
#உள்ளாட்சி தேர்தல் நடக்குமான்னு தெரியல..
#570 கோடி - கண்டேய்னர் எங்க போச்சுன்னு தெரியலை...
நாட்ல எவளோ பிரச்சனை நடந்துகிட்டுருக்கு இங்க ஒருத்தன்
தொடரி படத்துல ட்ரையின் 120கிலோ
மீட்டர் வேகத்துல மேல இருக்கும்போது
கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் பறக்கலனு
கேக்குறான்
தமிழக முதல்வர் உடல்நல குறையால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,"#அப்பலோவில என்ன நடக்குதுன்னு தெரியல.." என்று அப்போலோ மருத்துவமனையை குறை சொல்லியும் அ.தி.மு,க'வினரை வன்முறைக்கு தூண்டும் வகையிலும், தற்போது கோவையில் நடந்த ஹிந்து முன்னணி தலைவர் கொலைக்கு பிறகு நடந்த வன்முறைகளை மீண்டும் தூண்டும் வகையில், "#கோவையில பிரியாணிய திருடினது யார் என்று தெரியல.." என்று தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் குறிப்பிட்டு, "நாட்ல எவளோ பிரச்சனை நடந்துகிட்டுருக்கு இங்க ஒருத்தன் தொடரி படத்துல ட்ரையின் 120கிலோ மீட்டர் வேகத்துல மேல இருக்கும்போது கீர்த்தி சுரேஷ் பாவாடை ஏன் பறக்கலனு கேக்குறான்" என்று தான் பி.ஆர்.ஓ'வாக பணியாற்றும் தமிழ் திரையுலகின் ஒரு நடிகையின் பாவாடை ஏன் பறக்கவில்லை என்று ஒருவன் சொல்லுவதை போல் ஒரு பதிவையும் போட்டுள்ளார்.
ரஜினி, தனுஷ் மற்றும் விஜய் ஆகியோரின் உதவியாளர் மற்றும் பி.ஆர்.ஓ இப்படி அ.தி.மு,க கட்சியினரையும், வன்முறை தூண்டும் வகையில் கோவை பிரியாணி பற்றி பதிவிடுவதும், ஒரு வளர்ந்து வரும் நடிகை பற்றி அவதூறாக பெண்ணினத்தை கேவலபடுத்தி, பாவாடை ஏன் பறக்கல என்று பதிவிட்டுள்ள இந்த ரியாஸ் கே அஹமத்தை ரஜினி, விஜய் மற்றும் தனுஷ் கண்டிப்பார்களா? அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா??
இத்தகைய ஒரு சில உதவியாளர்களினால், பிரபலங்களுக்கு தேவையற்ற சிக்கலபாலும் தலைகுனிவும் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியாஸ் கே அஹமத்தின் முகநூளில் அவர் பதிவிட்டுள்ள அவதூறுக்கு, காவல்துறை அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமா?
தயாரிப்பாளர்கள் சங்கம் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளுமா??
ஒரு சக நடிகையை பற்றி அவதூறாக கிண்டல் செய்த ரியாஸ் கே அஹ்மத் மீது நடிகர் சங்கம் காவல்துறையில் புகாரோ அல்லது ஒழுங்கு நடவடிக்கையோ மேற்கொள்ளுமா???
நடிகை கீர்த்தி சுரேஷ் ரியாஸ் கே அஹ்மத் மீது சினிமா சங்கங்களிளும், காவல்துறையிலும் புகார் அளிப்பாரா????
ஒரு நடிகையை, பெண்ணினத்தை கொச்சையாக முகநூளில் பதிவிட்டமைக்கு மகளிர் சங்கங்களின் புரட்சி வெடிக்குமா?????
இந்த ஐந்து கேள்விகளுக்குமான பதிலுக்கு காத்திருப்போம்....
ரியாஸ் கே அஹ்மத் இந்த செய்திக்கு என்ன பதிலளிக்க போகிறார் என்று பொறுத்திருந்து பார்போம்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
