நடிகர் விஜய்யின் கட்சியுடன் தனது கட்சியை இணைக்க போகும் கூல் சுரேஷ்

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.
நடிகர் விஜய்யின் அரசியல் கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக, காமெடி நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே கட்சி
நடிகர் கூல் சுரேஷ் அண்மையில் பேட்டி ஒன்றில் பேசுகையில், "சிஎஸ்கே என கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த கட்சியை 2026 -ம் ஆண்டில் தமிழக வெற்றி கழகத்துடன் இணைக்கவுள்ளதாகவும்" தெரிவித்துள்ளார்.
மேலும், "நான் கட்சி ஆரம்பிப்பதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. விரைவில் அதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும். கட்சி ஆரம்பித்து தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை.
இருந்தாலும் கட்சியை தொடங்கி உதவிகள் செய்தால் நிறைய பேருக்கு உதவிகள் கிடைக்கும். சிஎஸ்கே கட்சியுடன் யார் கூட்டணி வைக்கிறார்களோ அந்த கட்சி தான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும்" என்று பேசியுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
