நடிகர் சௌந்தர்ராஜா - தமன்னாவுக்கு திருமணம்

வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சௌந்தர்ராஜா. சுந்தரபாண்டியன்' படத்தில் பரஞ்சோதி கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ஜிகர்தண்டா', 'பூஜை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் 'தர்மதுரை' படத்தில் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்து அழுத்தமான அடையாளம் பெற்றார்.
கவுண்டமணியுடன் கதாநாயகனாக எனக்கு எங்கும் வேறு கிளைகள் கிடையாது' படத்தில் நடித்த சௌந்தர்ராஜா இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சௌந்தர்ராஜா கள்ளன், 'சிலுக்குவார்பட்டி சிங்கம்', 'பில்லா பாண்டி''அருவா சண்டை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். க்ரீன் ஆப்பிள் என்டர்டெயின்மென்ட நிறுவனத்தின் சி.இ.ஓ. தமன்னாவுக்கும் சௌந்தர்ராஜாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மே மாதம் மதுரை உசிலம்பட்டியில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postசூர்யா - செல்வராகவன் கூட்டணி
