நடிகர் சூரிக்கு ஜோடியாகிறார் நயன்தாரா !

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருக்கும் நயன் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். தாஸ் ராமசாமி இயக்கத்தில் அவர் நடிப்பில் உருவாகி உள்ள `டோரா' படம் மார்ச் 31-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதுதவிர தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பல படங்களில் நடித்து வரும் நயன்தாரா, தற்போது `அறம்', `கொலையுதிர் காலம்', `இமைக்கா நொடிகள்', `வேலைக்காரன்' உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் புதுமுக இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் சூரிக்கு ஜோடியாக புதிய படம் ஒன்றில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநரிடம் கதையை கேட்ட நயன்தாராவுக்கு கதை பிடித்துப் போக அந்த படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டாராம்.
சூரி நாயகனாக நடிக்க உள்ள இப்படம் முழுக்க முழுக்க காமெடி பின்னணியில் உருவாக உள்ளது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
