அஜித் வைத்து எனது வளர்ச்சிக்கு திட்டமிடுகிறேனா, ஆவேசத்தில் நடிகர் சிம்பு

அஜித்தின் வளர்ச்சியை வைத்து எனது வளர்ச்சிக்கு திட்டமிடுவது போல ஒரு விமர்சனத்தை உருவாக்குகின்றனர்" என்று சிம்பு வருத்தமாக தெரிவித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும்: 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்',இப்படத்தில் சிம்புவுக்கு 3கதாநாயகிகள் நடித்துள்ளனர். ஸ்ரேயா, தமன்னா, மஹத், வி.டி.வி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது இப்படத்தில் யுவன்ஷங்கர் இசையமைத்துள்ளா"ர் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. மைக்கேல் ராயப்பன் தயாரித்துள்ளார். இப்படம் ஜூன் 23-ம் தேதி திரையில் வெளியாகவுள்ள. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் ஃபேஸ்புக்கில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது "அஜித் சாரை பற்றி யாருமே பேசாத போது, அவருடைய தோல்வியடைந்த படத்தின் கட்-அவுட்டை வைத்து 'தல' என்று கத்தியவன் நான். தற்போது அவர் வளர்ந்துவிட்டார். இப்போது எட்டாத உயரத்தில் இருக்கிறார் அனைவருமே அவரது பெயரை உபயோகித்து வருகிறார்கள். இனிமேல் அஜித்தைப் பற்றி நான் பேச மாட்டேன். அஜித் சாரின் வளர்ச்சியால் ஒரு ரசிகனாக மகிழ்ச்சி அடைகிறேன்" என்று பதிலளித்தார். சிம்புவின் இந்த பதில், சமூகவலைத்தளத்தில் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது.
இந்த சர்ச்சை குறித்து சிம்புவிடம் கேட்ட போது, "துறையில் எனக்கு பிடித்தவர்களில் ஒருவர் அஜித் அப்படி பிடித்தவர்களை பற்றி எப்போதுமே நான் வெளிப்படையாக இருந்திருக்கிறேன். இன்று, எனது கடின உழைப்பின் காரணமாக, எனக்கென ஒரு ரசிகர் கூட்டமும், துறையில் ஒரு நல்ல இடமும் கிடைத்துள்ளது. ஒரு சிலர், நான் அஜித்தின் புகழ்ச்சியை வைத்து எனது வளர்ச்சிக்கு திட்டமிடுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றனர். அவர்கள் செயல் முட்டாள்தனமானது.என்றும் சிம்பு அப்படிப்பட்டவன் அல்ல,அப்படிப்பட்ட எண்ணமும் எனக்கு இல்லை. என்று அவர் பேட்டியளித்துள்ளார்.
அஜித்தின் நட்சத்திர அந்தஸ்து எங்கோ சென்று விட்டது. வேறொரு தளத்தில் அது இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு யாருடைய ஆதரவும், பாராட்டும் இப்போது தேவையில்லை. அதைத்தான் நான் சொன்னேன். மற்றவர்கள் நினைப்பது குறித்து எனக்கு கவலையில்லை" என்றும் கவலைபடவேண்டும் என்ற அவசியமும் எனக்கு இல்லை, என்று பதிலளித்துள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
