Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

நக்கீரன் கோபால் கைதுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம்..!

On October 9, 2018
kamal
Share
நக்கீரன் கோபால் கைதுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பொதுமக்களின் கருத்துரிமையும், பேச்சுரிமையும் தடுக்கப்படும்போது அதை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு ஊடகங்களுக்கு வந்து சேருகிறது. ஆனால் ஊடகங்களின் கருத்துரிமை நசுக்கப்படும்போது அது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிப்பதற்கு சமமாகிறது. வெள்ளைக்காரர்கள் கொண்டு வந்த வாய்ப்பூட்டுச் சட்டத்தை வேறு பெயரில், மாற்றுக் கருத்து தெரிவிப்போருக்கு எதிராக அரசு பயன்படுத்துகிறது. இதன் மூலம் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. ஜனநாயகத்தின் நெறிமுறைகளை பாதுகாக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது. அது ஊடகங்களின் சுதந்திரமாகும். நக்கீரன் கோபாலை தவறான அடிப்படையில் கைது செய்திருப்பதை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது. என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.