Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தோல்வி விரக்தி, ஆஸி., கிரிக்கெட் வீரர்கள் சென்ற பேருந்து மீது கல் வீச்சு!

On October 11, 2017
80c3cb97-a06d-4661-ab03-58f8753992f1
Share
80c3cb97-a06d-4661-ab03-58f8753992f1  , ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ராஞ்சியில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று கவுகாத்தியில் நடைபெற்ற 2வது டி 20 போட்டியில் இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங் காரணமாக ஆஸ்திரேலிய அணி எளிதாக வென்றது. இந்த போட்டி முடிந்ததும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள், அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு பேருந்து ஒன்றில் சென்றனர்.  , அப்போது அந்த பேருந்து மீது மர்ம நபர்கள் சிலர் கல் வீசி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஆஸ்திரேலிய அணி அவர்கள் சென்ற பேருந்தின் கண்ணாடி உடைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து அந்நாட்டு வீரர்கள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பின்ச் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிபடுத்தியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.