தொடர் கனமழை எதிரொலி: சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு!

கனமழை எச்சரிக்கையை அடுத்து சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை , சென்னையில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளார். சென்னையில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் சென்னை நகரின் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனத் தெரிவித்தார். இந்நிலையில், இன்று பள்ளிகள் ஒரு மணி நேரம் முன்னதாகவே முடிக்கப்பட்டு, மாணவர்கள் பத்திரமாக வீடு திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது.
இதனிடையே இன்று மாவட்ட ஆட்சியர் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.

