Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தொடங்கியது 5-வது ஒருநாள் போட்டி!

On October 1, 2017
DKfIZyaXoAAvvBk_17513_09135
Share
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது ஒருநாள் போட்டி இன்று நாக்பூரில் சற்றுமுன் தொடங்கியது .டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்துவுள்ளது. முதலில் மோதிய நான்கு போட்டிகளில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றும் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. DKfIZyaXoAAvvBk_17513_09135 பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என்று அனைத்திலும் பலமாக உள்ள இந்திய அணியை சமாளிக்க ஆஸ்திரேலிய அணி திணறிவருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளைப் பதிவு செய்தது. இதன் மூலம் இந்த ஒரு நாள் போட்டித் தொடரை கைப்பற்றிய இந்திய அணி, இன்று இத்தொடரின் இறுதிப்போட்டியில் களமிறங்குகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் சர்வதேச தரவரிசையில் மீண்டும் முன்னேறியே இருக்க இந்திய அணியும், போட்டியை வென்று இத்தொடரில் ஆறுதல் வெற்றியைத் தேட ஆஸ்திரேலிய அணியும் தீவிரம் காட்டும் என்பதால் இப்போட்டியும் ரசிகர்களுக்கு விருந்தாகவே அமையும் என்று தெரிகிறது. கடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியது. 4-வது போட்டியில் களமிறக்கப்பட்ட அதே அணி தான் இன்று நாக்பூரில் நடக்கும் இறுதிப்போட்டியிலும் களம் காண்கிறது.இந்திய அணியின் பந்து வீச்சை பும்ரா-புவனேஸ்குமார் இருவரும் தொடங்கியுள்ளனர். 5-ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் ஏதுமின்றி 23-ரன்கள் எடுத்துள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.