Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தொடங்கப்போகிறது ‘அறம்’ படத்தின் இரண்டாம் பாகம்!

On November 13, 2017
205b9203018ea34d49847aeaf33714c1
Share
 , 4954a307fc9ae039d4e2d8dc20c062de கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி, நயன்தாரா நடிப்பில் வெற்றி நடைபோடும் ‘அறம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூகம் சார்ந்த இத்தகைய வலுவான கதையைத் தமிழ்த் திரையில் பார்ப்பது அரிது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ராஜேஷ் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவெடுத்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. படத்தின் முடிவில் நயன்தாரா அடுத்த கட்ட போராட்டத்துக்குத் தயாராவது போன்றே முடிந்துள்ளதால், இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சியாக இன்னும் தீவிரத்தன்மையுடன் இருக்கும் என்று கூறினார். 205b9203018ea34d49847aeaf33714c1  , இதைத் தொடர்ந்து ‘அறம்’ பட இயக்குநர் கோபி நைனார் கூறுகையில், “'அறம்’ இரண்டாம் பாகத்தை எழுதி இயக்குவது என்பதை ஏற்கனவே முடிவு செய்த விஷயம் தான். திரைக்கதை முடிவடையும் நிலையில் உள்ளது “ என்றார்.  , இரண்டாம் பாகத்திலும் நயன்தாரா நடிப்பாரா என்று கேட்டதற்கு ஒரு வாரத்தில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்றார். முதல் பாகத்தை விடவும் இந்தப் படம் மிகவும் காத்திரமான கதையம்சம் கொண்டது என்றும், படப்பிடிப்பு ஜனவரி 2018-ம் ஆண்டு தொடக்கத்தில் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.