Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பயிற்சி"..

On March 25, 2017
teacher
Share
teacher ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் மண்டல தேர்தல் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் 330 வாக்கு சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அனைத்து வாக்கு சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி நிறுவப்படுகிறது. தேர்தல் பணியில் மொத்தம் 1744 ஆசிரியர்கள், அதிகாரிகள் ஈடுபடுகிறார்கள். 330 வாக்கு சாவடிகளுக்கு 330 தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு கீழ் 3 கட்டமாக ஆசிரியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மேல் நிலைப்பள்ளியில் நடக்கும் இந்த பயிற்சி முகாமில் மண்டல தேர்தல் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். மின்னணு வாக்குபதிவு எந்திரத்தை எப்படி கையாள வேண்டும், பழுது ஏற்பட்டால் மாற்று ஏற்பாடு எவ்வாறு செய்ய வேண்டும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் கருவி மூலம் தரப்படும் ஒப்புகை சீட்டு போன்றவற்றை பொது மக்களுக்கு வழங்குவது, அல்லது பார்த்து தெரிந்து கொள்ள உதவி செய்தல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.