தேனியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் பலி!

தேனி, வடகரையைச் சேர்ந்தவர் சாவித்திரி. இவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழையில் சாவித்ரியின் வீட்டு சுவர் பலம் இழந்துள்ளது. இதனை அறியாத சாவித்திரி வழகம் போல் நேற்று உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்துவிழுந்தது. இதில் சாவித்திரி இடுபாடுகளுக்கிடையே மாட்டிக்கொண்டார். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் சாவித்திரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குப் செல்லும் வழியிலேயே சாவித்திரி உயிர் இழந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
