Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தேசிய விருது பெற்ற மராத்தி படமான 'சய்ராட்' இந்தி ரீமேக்கில் அறிமுகமாகும் ஸ்ரீதேவியின் மகள்

On November 15, 2017
sairathindi
Share
sairathindi பெரும் வரவேற்பைப் பெற்ற மராத்தி படமான 'சய்ராட்' இந்தி ரீமேக்கின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர்  , நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் வெளியான மராத்தி திரைப்படம் 'சய்ராட்'. ரிங்கு ராஜ்குரு மற்றும் ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இப்படம் 5 கோடியில் தயாரிக்கப்பட்டு 150 கோடி வசூலை ஈட்டியது. மேலும், அனைத்து தரப்பிலும் பாராட்டப்பட்டு, தேசிய விருதும் வென்றது.  , இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்றினார் இயக்குநர் கரண் ஜோஹர். தனது தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலமாக தயாரிக்க திட்டமிட்டார். இப்படத்தின் மூலமாக ஸ்ரீதேவியின் மகள் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், அத்தகவலை படக்குழு உறுதிப்படுத்தாமல் இருந்தது.  , தற்போது 'சய்ராட்' இந்தி ரீமேக்கின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது. தர்மா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு 'தடக்' என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.  , நாயகனாக இஷான் மற்றும் நாயகியாக ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். சஸான்கைட்டான் இயக்கவுள்ள இப்படம் அடுத்தாண்டு ஜூலை 6-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருக்கிறது படக்குழு

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.