Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தேசிய கீதம் திரையரங்குகளில் கட்டாயமில்லை-உச்சநீதிமன்றம் உத்தரவு!!

On January 9, 2018
cinema_hall_anthem 2
Share
cinema_hall_anthem 2 இந்தியா முழுவதுமுள்ள திரையரங்குகளில் கட்டாயம் தேசிய கீதம் இசைக்கவேண்டும். அப்போது பார்வையாளர்கள் அனைவரும் எழுந்துநிற்கவேண்டும் என்று 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக பா.ஜ.கவைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 'திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல. இதுகுறித்த பழைய உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும்' என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நேற்று தெரிவித்திருந்தது. அதனையடுத்து, இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், 'தேசிய கீதம் இசைக்கப்படும்போது அதற்கு உரிய மரியாதை கொடுக்கவேண்டும். அதனால், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கவேண்டிய கட்டாயமில்லை' என்று உத்தரவிட்டனர். தங்களது முந்தைய உத்தரவை மாற்றிக்கொள்வதாகவும் நீதிபதிகள் கூறினர். தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பது நீதிமன்றத்தின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள 12 உறுப்பினர்கள் குழுவினருக்கும் நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர். எனினும், தேசிய கீதம் இசைக்கப்பட்டால் எழுந்து நிற்பதற்கு மாற்றுத்திறனாளர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ள முந்தைய உத்தரவு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த பொதுநல வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.