Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"தெறி" இசை வெளியீட்டில் சஸ்பென்ஸாக திறக்கவிருந்த விஜய் சிலை.....

On March 31, 2016
Vijay Statue Inauguration Cancelled
Share
Vijay Statue Inauguration Cancelled நடிகர் விஜய் மற்றும் சமந்தா நடித்து, அட்லீ இயக்கத்தில், கலைப்புலி S தாணு தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் "தெறி". இப்பத்தின் இசை வெளியீடு சமீபத்தில் தான் சென்னை சத்தியம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி வருவதாக வதந்திகள் சமூகவளைதளங்களில் உலாவந்தன. ஆனால் அவை அனைத்தும் பொய்யாகவே இருந்தன. இப்படி இருக்க, வெளி வராத உண்மை ஒன்று உள்ளது. "தெறி" இசை வெளியீட்டின் போது, மெழுகால் செய்யப்பட்ட நடிகர் விஜய்யின் உருவச்சிலை ஒன்று அங்கு திறக்கப்படவிருந்தது. இந்த சிலை திறப்பு விழா இறுதி நேரத்தில் கைவிடப்பட்டது. அதற்க்கான காரணம் என்ன என்று விசாரித்தபோது, வரவிருக்கின்ற தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் நடிகர் விஜய்யின் பெயர் தேவையின்றி பந்தாடப்படும் என்று சிலர் விஜய்யிடமும், தயாரிப்பாளர் தானுவிடமும் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி படம் வெளியீட்டின் போது அரசியல் கட்சிகளினால் பட வெளியீட்டுக்கு ஏதாவது இன்னல்களும் ஏற்படலாம் என்றும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது. "தெறி" திரைப்படம் ஏப்ரல் மாதம் உலகெங்கும் வெளிவரவுள்ளது. படம் வெளியாகி சில தினங்களில் விஜய் ரசிகர்கள் மன்றம் மூலமாக ஒரு பிரமாண்ட விழா ஏற்பாடு செய்யப்பட்டு மெழுகால் உருவாக்கப்பட்டுள்ள நடிகர் விஜய்யின் உருவ சிலை திறக்கப்படவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் ரசிகர்களுக்கு விரைவில் டபுள் பம்பர் பரிசு இருக்கும் போல் உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.