Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

துபாய் சர்வதேச பாரா தடகள போட்டியில் இந்தியா 13 பதக்கங்கள் வென்றது!

On March 25, 2017
dubai
Share
dubai துபையில் நடைபெற்ற சர்வதேச பாரா தடகள போட்டியில் இந்தியா 5 தங்கம் உட்பட 13 பதக்கங்களை வென்றது. இதில் 3 தங்கப் பதக்கங்கள் சுந்தர் சிங் குர்ஜார் கைப்பற்றியதாகும். அவர் குண்டு எறிதல், ஈட்டி எறிதல் மற்றும் வட்டு எறிதலில் தலா ஒரு தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான சக்கர நாற்காலி குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் கரம்ஜோதி தங்கப் பதக்கமும், அஸ்வதி வெள்ளிப் பதக்கமும் கைப்பற்றினர். உயரம் தாண்டுதலில் இந்தியாவின் சரத் குமார் வெள்ளிப் பதக்கமும், நாகராஜ் கவுடா வெண்கலப் பதக்கமும் வென்றனர். ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.