'தீரன்' பெரிய பாண்டியனின் வீட்டிற்கு சென்று நடிகர் கார்த்தி ஆறுதல்!

வீர மரணம் அடைந்த பெரிய பாண்டியனின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது குடும்பத்தாருக்கு நடிகர் கார்த்தி இன்று ஆறுதல் கூறியுள்ளார். நகைக் கொள்ளையர்களை பிடிக்க ராஜஸ்தானுக்கு சென்ற சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் சுட்டுக் கொள்ளப்பட்டார். விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்ட அவரின் உடலுக்கு விமான நிலையத்தில் வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
 ,
பின்னர் அவரின் உடல் சொந்த ஊரான சாலைப்புதூருக்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. கார்த்தி நடித்த தீரன் பட பாணியில் பெரிய பாண்டியன் கொலை செய்யப்பட்டுள்ளார். பெரிய பாண்டியனின் மறைவுக்கு ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார் கார்த்தி. இந்நிலையில் அவர் நெல்லை மாவட்டம் சாலைப்புதூரில் உள்ள பெரிய பாண்டியனின் வீட்டிற்கு இன்று காலை சென்றுள்ளார். பெரிய பாண்டியனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு கார்த்தி நேரில் ஆறுதல் கூறியுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
