தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கத் தடை! -டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவு

டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்கவும் வெடிக்கவும் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!
டெல்லியின் அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் சுற்றுச் சூழல் மாசுக்களை சமாளிக்க கடந்த ஜனவரி 1, 2016 முதல் போக்குவரத்து கட்டுப்பாடுக்கள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒற்றை இலக்கம் கொண்ட வாகனங்கள் ஒற்றை எண்ணுள்ள தேதியிலும், இரட்டை இலக்க எண்கள் இரட்டை எண்களின் தேதிகளிலும் ஓடும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த அறிவிப்புகள் சுற்றுச் சூழல் ஆர்வலர்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்றது.
இந்த நிலையில் ‘‘இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. ஒரு தீபாவளியாவது பட்டாசுகள் வெடிக்காமல் கொண்டாட முயற்சி செய்வோமே’’ என்று உத்தரவிட்டுள்ளதோடு, தீபாவளி முடியும்வரை டெல்லியில் பட்டாசுகள் விற்கவும் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
