Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திருமுருகன் காந்தியை நேரில் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்..!

On October 4, 2018
031e9f548ac47bb5758e94a30e2cbf1f
Share

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து இருக்கிறார்.

மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஐநா சபையில் பேசியதற்காக திருமுருகன் காந்தி கடந்த மாதம் 7ம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக ஐநாவில் பேசியதற்காக அவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் அவர் ஜாமீன் பெற்று இரண்டு நாட்களுக்கு முன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜெயிலில் இருந்ததால் அவர் உடல்நிலை இதனால் மோசமாக நலிவடைந்து உள்ளது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சந்தித்து இருக்கிறார். மருத்துவமனைக்கே சென்று திருமுருகன் காந்தியை ஸ்டாலின் சந்தித்தார்.

திருமுருகன் காந்தியின் உடல்நிலை குறித்து விசாரித்து இருக்கிறார். விரைவில் மருத்துவமனையில் இருந்து திருமுருகன் காந்தி டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.