Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திருமணத்தில் நம்பிக்கை இல்லை-நடிகை சார்மி..!

On March 27, 2018
pic
Share

காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, லாடம் படங்களில் நடித்திருப்பவர் சார்மி. தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்திருக்கிறார். சார்மியும் டோலிவுட் இயக்குனர் புரி ஜெகநாத்தும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. மேலும் 2 ஆண்டுகளுக்கு முன் போதை மருந்து வழக்கிலும் சார்மி, புரி  ஜெகநாத் விசாரிக்கப்பட்டனர். பின்னர் அப்பிரச்னை அமுங்கிப்போனது. சமீபகாலமாக நடிப்பில் அதிக கவனம் செலுத்தாமல் பட தயாரிப்பு மேற்பார்வையில் சார்மி கவனம் செலுத்தி வருகிறார்.

ஹீரோயின்கள் பலர் திருமணத்தைபற்றி கவலைப்படாமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். இன்னும் சில நடிகைகள் திருமணத்தில் நம்பிக்கை இல்லை என்று ஹாலிவுட் நடிகைகள் பாணியில் விளக்கம் அளிக்கின்றனர். அந்த பட்டியலில் சார்மியும் இணைந்திருக்கிறார். ‘எப்போது திருமணம் செய்வீர்கள்?’ என்று அவரிடம் கேட்டபோது பதில் அளித்தார். அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சார்மி கூறும்போது,’திருமணம் என்ற பெயரில் யாரோ ஒருவர் என் வாழ்வில் புகுந்து நீ என்ன செய்கிறாய் என்று என்னிடம் கேட்டால் அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நான் சினிமாவுலகில் இருக்கிறேன். விடுமுறை நாட்களில் நண்பர்களுடன் வெளியில் செல்வேன். எல்லா நேரத்திலும் நான் அவருக்கு கிடைக்க மாட்டேன். அவருடன் இருப்பது சில நாட்கள் மட்டுமாகவே இருக்கும். சினிமாவுலகில் ஒருவருடன் எனக்கு உறவு இருக்கிறது. ஆனால் இந்த நிமிடம்வரை அவருடன் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவர் நல்லவர்’ என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.