Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திருப்பூர் அருகே இரட்டை பெண் குழந்தைகளுடன், கணவன்-மனைவி தற்கொலை!

On October 28, 2017
$largeimg29_Saturday_2017_120704739
Share
$largeimg29_Saturday_2017_120704739 11 மாத இரட்டை பெண் குழந்தைகளுடன் கணவன், மனைவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருப்பூரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி சுதா. இவர்களுக்கு 11 மாதங்களுக்கு முன்பு, விவிதா மற்றும் விசிதா என்று இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில், இன்று குழந்தைகளையும் கொன்று, தம்பதிகள் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். எதற்காக தற்கொலை செய்து கொண்டனர் என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கந்துவட்டி பிரச்சினை அதிகரித்துள்ள நிலையில், இந்த தற்கொலையும் அத்தோடு தொடர்புள்ளதாக இருக்குமோ என்ற கேள்வி எழுகிறது. மேலும் இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.