Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

திமுக பாஜக சந்திப்புக்கு பின்னால் இவ்வளவு விஷயம் உள்ளதா?

On August 20, 2024
19stalin-rajnath
Share

தமிழ்நாட்டில் கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டது, இதில் திமுக பாஜகவினர் நெருக்கமாக இருந்தது உள்ளிட்ட பல விஷயங்கள் கவனம் பெற்றுள்ளது.

இந்த நெருக்கத்திற்கு பின் சில முக்கியமான காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இதில் பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய அளவில் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

கருணாநிதியை மிகச் சிறந்த நிர்வாகி என்று குறிப்பிட்ட ராஜ்நாத் சிங், அவர் மாநில அரசியல்வாதி இல்லை.. தேசிய தலைவர் என்றும் புகழாரம் சூட்டினார். பாஜக தலைவர் அண்ணாமலை முன் வரிசையில் அமர வைக்கப்பட்டார். பாஜக - திமுக நிர்வாகிகள் நெருக்கமாக காணப்பட்டனர். பாஜக இப்படி திமுகவுடன் நெருக்கமாக இருக்க வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுகவின் தயவை பாஜக நாடுகிறதோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் கருணாநிதி நூற்றாண்டு தினத்தையொட்டி நடந்த நாணயம் வெளியீட்டு விழாவில் பாஜகவினர் கலந்து கொண்டதால் திமுக - காங்கிரஸ் கூட்டணி உடையும் என்று சிலர் கருத்துக்களை வைக்கின்றனர். ஆனால் அரசியல் வட்டார தகவலின்படி, திமுக-காங்கிரஸ் கூட்டணி உடையாது, 2026லும் அது தொடரும், ஆனால் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை கடுமையாக இருக்கும்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களின் திட்டப்படி, திமுகவிடம் இருந்து 40க்கும் மேற்பட்ட இடங்களைப் பெறுவதே தங்களின் நோக்கம், ஆனால், 30 இடங்களுக்கு மேல் கொடுக்க, தி.மு.க., விரும்பாது. திமுகவிடம் இருந்து அதிக இடங்களைப் பெறுவதற்கு அதிமுகவை வைத்து காய் நகர்த்துவோம்.

அதிமுகவிடம் அவ்வப்போது நெருக்கம் காட்டினால் திமுகவிடம் அதிக இடங்களை கேட்க முடியும், என்று காங்கிரஸ் திட்டமிடுகிறதாம். அதாவது அதிமுகவை வைத்து.. திமுகவை மிரட்டி அதிக இடங்களை கேட்க காங்கிரஸ் திட்டத்தில் உள்ளதாம்.

இந்த விஷயத்தில் திமுகவுக்கு உதவ பாஜக விரும்புகிறது, ஏனென்றால் மோடியின் பிரச்சனை என்னவென்றால், 2026 இல் பாஜக அல்லது என்டிஏ வெல்ல முடியாது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். திமுக இப்போது போல் கூட்டணி ஆட்சியை அமைக்கத் தள்ளப்பட்டால்... அது ஒரு வகையில் காங்கிரசுக்கு சாதகமாக அமையும்.

காங்கிரசுக்கு அதிக இடங்கள் கிடைத்தால்.. ஆட்சியில் பங்கு கேட்கும். அப்படி நடந்தால் காங்கிரஸ் தமிழ்நாட்டில் வலிமையாக இருக்கும். இதை பாஜக விரும்பாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் வளர்வதை பாஜக விரும்பாது. இப்படிப்பட்ட நிலையில்தான் திமுகவிற்கு பாஜக என்ற ஆப்ஷனும் உள்ளது என்ற பிம்பத்தை பாஜக ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அதிமுகவிடம் செல்ல போகிறோம் என்று கூறி திமுகவை காங்கிரஸ் மிரட்ட முடியாது. அப்படி மிரட்டினால் நாங்கள் பாஜகவுடன் போய் விடுவோம் என்று திமுகவும் காங்கிரசை பதிலுக்கு மிரட்டும். இப்படி ஒரு சூழலைத்தான்.. நாணய வெளியீட்டு விழா ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இரண்டாவதாக நாயுடு &, நிதீஷுக்கு பாஜக செக் வைத்துள்ளது. எங்களுக்கு நீங்கள் மட்டும் தேவை இல்லை.. திமுக உள்ளிட்ட வேறு ஆப்ஷன்கள் உள்ளன என்று செய்தியை பாஜக அளிக்கிறது.

2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

240 இடங்களில் பாஜக வென்றுள்ளது இதனால் பாஜக ஆட்சி நீடிக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.

2024 லோக்சபா தேர்தலுக்கு பின் மைனாரிட்டி ஆட்சி அமைத்து இருக்கும் பாஜக எப்படியாவது மற்ற மாநில கட்சிகளின் உதவிகளை பெற தீவிரமாக துடித்துக்கொண்டு இருக்கிறதாம். முக்கியமாக திமுகவின் 21 எம்பிக்கள், திரிணாமூல் காங்கிரசின் 47 எம்பிக்கள் ஆகியோரின் உதவியை நாட பாஜக திட்டமிட்டு வருகிறதாம். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. 1. ஜெயலலிதா. 2 மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்.

இப்போது திமுகவும் எங்கள் பக்கம் வர தயார்.. உங்களை மட்டும் நம்பி நாங்கள் இல்லை என்ற மெசேஜை நாயுடு, நிதிஷுக்கு பாஜக சொல்லாமல் சொல்லி உள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.