"தல 59" பட பூஜை : ரிலீஸ் தேதி - பக்கா பிளான்..!

தல 59 படத்தின் ரிலீஸ் தேதியை திட்டமிட்டு படத்தை தொடங்க உள்ளனர் படக்குழு. இதனால் இந்த படம் நிச்சயம் ரசிகர்களுக்கு மிக பெரிய ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் சிறுத்தை சிவாவுடன் விஸ்வாசம் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
போனி கபூர் தயாரிப்பில் பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாக உள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.
தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் ஒன்றும் கிடைத்துள்ளது. அதாவது தல 59 படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியிட திட்டம் தீட்டி களமிறங்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் இந்த படம் தல ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
வினோத் படத்தின் வேலைகளை விறுவிறுப்பாக முடித்து விடுவார் என்பதால் நிச்சயம் அஜித்தின் பிறந்தநாளுக்கு இப்படம் வெளியாகும் என நம்பலாம்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
