தல அஜித்தின் ‘விவேகம்' படத்தின் தெறிக்க விடும் இசையில் வெளியாகும் மேலும் 3 பாடல்கள் !

அஜித் குமார், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விவேகம்’. இதனை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்திற்கு கபிலன் வைரமுத்து, விவேகா, யோகி பி, சிவா, ராஜ குமாரி உள்ளிட்டோர் பாடல்கள் எழுதியுள்ளனர். முன்னதாக சர்வைவா, தலை விடுதலை, காதலாடா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன.
முன்னதாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு, ரிலீஸ் தேதிக்கு தயாராகி விட்டது. இந்நிலையில் விவேகம் படத்தின் பாடல்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகிறது. இதையடுத்து கடைகளிலும், டிஜிட்டல் வடிவத்திலும் இன்று பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
