Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தலைவர் மீண்டு வருவார் : திமுக கொடியுடன் தொண்டர்கள் காத்திருப்பு..!

On August 7, 2018
ea1532d88505e817e79e7f91bd88e355
Share
தலைவர் மீண்டும் வருவார் என்று பிரம்மாண்ட திமுக கொடியுடன் தொண்டர்கள் காவேரி மருத்துவமனை முன்பு காத்து கிடக்கின்றனர். கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கருணாநிதியின் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது பெரும் சவாலாக உள்ளதாகவும் 24 மணி நேரம் கழித்தே அவரது உடல்நிலை குறித்து கூறமுடியும் என்றும் மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை முன்பு தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில் டெல்லியில் இருந்து திமுக எம்பிக்கள் வருகின்றனர். இத்தனை நாட்கள் காவேரி மருத்துவமனையில் கருணாநிதி அனுமதிக்கப்படும் போதெல்லாம் அழைத்து வரப்படாத தயாளு அம்மாள் நேற்று அழைத்து வரப்பட்டார். இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் வேறு கருணாநிதி உடல்நிலை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதனால் தொண்டர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். மேலும் மருத்துவர்கள் கொடுக்கப்படும் சிகிச்சையை கருணாநிதியின் உடல் ஏற்றுக் கொண்டு அதன் மூலம் முன்னேற்றம் அடைந்தால் அதை மீண்டும் இன்னொரு அறிக்கையாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்படும்" என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பிரம்மாண்ட திமுக கொடியுடன் தொண்டர்கள் இன்று 11-ஆவது நாளாக காத்து கிடக்கின்றனர். இன்றைய தினம் மீண்டும் ஒரு அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.