Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

'தலைவன் இருக்கிறான்' படத்தை தொடங்க கமல் திட்டம்!

On July 27, 2017
kamalhasan1_2158556f-1
Share
kamalhasan1_2158556f-1 'விஸ்வரூபம் 2' படத்தின் இறுதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டிற்குள் படத்தை வெளியிட கமல் திட்டமிட்டு இருக்கிறார். விரைவில் இப்படத்தின் ட்ரெய்லரையும் வெளியிட திட்டமிட்டுள்ளார். 'விஸ்வரூபம் 2' படத்தைத் தொடர்ந்து 'சபாஷ் நாயுடு' படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்க கமல் திட்டமிட்டுள்ளார். இதனை முதல் பிரதி அடிப்படையில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. ரம்யா கிருஷ்ணன், ஸ்ருதிஹாசன், பிரம்மானந்தம் உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்துள்ளார்கள். இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து 'தலைவன் இருக்கிறான்' படத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார் கமல். பொருளாதாரம், நிழல் உலகம் மற்றும் அரசியல் கோட்பாடுகளை மையப்படுத்தியது என இப்படத்தைப் பற்றி முன்பே கமல் குறிப்பிட்டிருந்தார். மேலும், இதில் நடிக்க சைஃப் அலிகானிடமும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தற்போது இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் வெளியிடவில்லை நடிகர் கமல்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.