Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தருண் தேஜ் நடிக்கும் பூவே போகாதே...

On July 16, 2019
1563253245236
Share

கோல்ட் டைம் இன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சத்யபிரமீலா தயாரிக்கும் படம் "பூவே போகாதே" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தருண் தேஜ் கதாநாயகனாகவும், லாவண்யா கதாநாயகியாவும் நடித்துள்ளனர். இவர்களுடன் கிடார் ஷங்கர், அஜெய் கோஸ், சீனியர் சூர்யா, சத்யகிருஷ்ணன், ஆகியோர் நடித்துள்ளனர்.

பாடல்களை விவேகா, டாக்டர் லிங்கேஸ்வர் ஆகியோர் எழுத, சபு வர்கீஸ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரீனிவாஸ் வின்னகொட்டா கையாள, ஜே.பி படத்தொகுப்பினை கையாள்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார் நவீன் நயனி.

இப்படம் பற்றி இயக்குனர் கூறியதாவது, "இது 1980 களில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட காதல் திரைப்படம் இது. முழுக்க முழுக்க நாயகன், நாயகியை சுற்றி நடக்கும் திரைக்கதை இது.கல்லூரியில் படிக்கும் நாயகன், நாயகி இருவருக்கும் காதல் மலர்கிறது. அதனால் அவர்களுக்கு ஏற்பட இடையூறுகள் மற்றும் எதிர்ப்புகளை எப்படி கையாள்கிறார்கள்.

அந்த காலகட்டத்தில் காதலை இந்த சமூகம் எப்படி பார்த்தது என்பதை அழுத்தமாக பதிவிடுள்ளோம்.

தங்களின் காதலுக்கு வந்த எதிர்ப்புக்களை மீறி எப்படி காதல் ஜோடி சேர்ந்தார்கள் என்பதை இப்படத்தில் கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம்." என சொல்கிறார் இயக்குனர் நவீன் நயனி.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.