தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து வரும் மிரட்டல்கள்! மீறி வரும் "மொட்ட சிவா கெட்ட சிவா"....

லாரன்ஸின் நடிப்பில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் "மொட்டசிவா கெட்ட சிவா"படம் சில புல்லுறுவிகளால் இடைஞ்சலுக்கு ஆளாகியுள்ளது.
பல்வேறு தடைகளை கடந்து, பெரும் பிரச்சனையில் இருந்து மீண்டு, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான மொட்ட சிவா கெட்ட சிவா திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி ரிலீஸாகிறது. இப்போது தமிழ் திரையுலகிற்கு தொடர்ச்சியாக இடைஞ்சல்களை ஏற்படுத்தும் சில நபர்களால் இந்தப்படத்தின் தயாரிப்பு தரப்பு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
படம் ஆரம்பத்தில் இருந்தே பெரும் பிரச்சனைகள் சூழ்ந்திருந்த போதிலும் தயாரிப்பாளர் தந்த ஒத்துழைப்பினாலும், லாரன்ஸ் தன் சம்பளத்தை விட்டுக்கொடுத்ததாலும், பைனான்ஸியர்கள் பலரும் பெரும் தொகையை விட்டுக் கொடுத்தாலும் படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் என படக்குழு ரிலீஸ் வேலைகளில் பரபரப்பாக இருந்தது.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து செய்து, சம்பாதிக்கும் கும்பல் ஒன்று, தங்களுக்கு கமிஷன் வரவில்லையென்பதால் சில கடப்பஞ்சாயத்து வேலைகளில் இறங்கியது. மேலும் பொய் வழக்கு ஒன்றைப் போட்டு படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடை வாங்கும் முயற்சியில் இயங்கி வருகிறது.
பெரிய ஹீரோ என பெரிய செலவு செய்து பட ரிலீஸிற்கு அனைத்து விளம்பர வேலைகள், தமிழ்நாடு முழுதும் தியேட்டர் போடும் வேலைகள், செய்து கொண்டிருக்கும் தயாரிப்புத்தரப்பு இப்போது மீண்டும் படத்தை தள்ளிப்போட்டால் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
தங்கள் சுய லாபத்திற்காக தொடர்ச்சியாக பெரிய படங்கள், முன்னனி ஹீரோ படங்கள், ரிலீஸாகும் சமயத்தில் இம்மாதிரி கோர்ட்டில் வழக்குப் போட்டு கட்டப்பஞ்சாயத்து செய்து, பணம் சம்பாதிக்கும் கும்பல் பெருகி வருவது தமிழ் சினிமாவிற்கே மிகப்பெரும் ஆபத்தாக உருவாகி வருகிறது.
பல சங்கடங்களில் சிக்கித்தவிக்கும் தமிழ் சினிமா இம்மாதிரியான சங்கடங்களையும் இப்போது சந்தித்து வருகிறது.
இந்தத் தடைகள் அனைத்தையும் உடைத்து "மொட்ட சிவா கெட்ட சிவா" திரைப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளிவரும் எனத் தெரிகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
