Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தயாரிப்பாளராகிறார் நடிகர் நிதின் சத்யா!

On October 5, 2017
0b6092db-88b1-4e0d-950e-50fc9e48bcc3_17504
Share
 , 2b49432c-f9d1-42b7-95f6-8d4b782169a3 கதாநாயகனும், பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளவருமான நிதின் சத்யா தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார். 'SHVEDH' என்ற புதிய பட தயாரிப்பு நிறுவனமொன்றை தொடங்கியுள்ளார். இது குறித்து நிதின் சத்யா கூறுகையில், '' தயாரிப்பாளராக வேண்டும் என்ற கனவு எனக்கு எப்பொழுதுமே இருந்தது. அதற்கான நல்ல கதையை தேடிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தான், வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்த பிச்சுமணி என்னிடம் ஒரு பிரமாதமான கதையை சொன்னார். உடனே இக்கதையை தயாரிக்க ஒப்புக்கொண்டேன்.  எனக்கு பிச்சுமணியை நீண்ட காலமாகவே தெரியும். இக்கதைக்கு ஜெய் தான் பொருத்தமானதாக இருப்பார் என எங்களுக்கு தோன்றியது. அவரை அணுகி இக்கதையை சொன்னபோது அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிக அருமையாக வந்துள்ளது. ஜெய்யின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்பும் எங்களுக்கு பெரும் பலமாகவுள்ளது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின்  பெயர்கள்  மற்றும்  படத்தின் தலைப்பு மிக விரைவில் அறிவிக்கப்படும்''. என்றார். இப்படத்தை நிதின் சத்யாவுடன் இணைந்து அவரது நண்பர் பத்ரி கஸ்துரியும் தயாரித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.