Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழ், மலையாளத்தில் பிஸியான சோனா..!

On July 29, 2014
Sona copy
Share

கவர்ச்சி நடிகை தான் என்றாலும் குத்துப்பாட்டுக்கு ஆடாதவர், காமெடியில் பட்டையை கிளப்புபவர் என வித்தியாசமானவர் தான் நடிகை சோனா.. தற்போது மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ”ஆமையும் முயலும்” என்ற மலையாள படத்தில் நடிக்கிறார். ஏற்கனவே மோகன்லால் நடித்த கர்மயோதா’ படத்தில் கிளாமர் வில்லியாக நடித்த சோனா, இந்தப்படத்தில் முழு நீள கதாபத்திரத்தில் நடிக்கிறார்.

இதுதவிர மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் கே.கே.ஹரிதாஸ் இயக்கத்தில் ”திலீப் விவாஹித்தனயாள்” என்ற படத்தில் நடிக்கிறார். அதேபோல தமிழிலும் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜித்தன்-2’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். விரைவில் தெலுங்கு திரையுலகின் பிரபல இயக்குனர் படத்திலும் நடிக்கவுள்ளார் சோனா.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.