தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது, நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் - நமீதா பிரமோத்..!

தமிழ் சினிமா ஒரு போதும் பிராந்திய கலைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமையை அளித்ததில்லை. மாறாக எல்லா மொழியில் இருந்தும் திறமையை மட்டுமே மூலதனமாக கொண்டு வரும் சிறந்த கலைஞர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தே வந்திருக்கிறது. நீங்கள் ஒரு உதாரண பட்டியல் வாசித்தால் அது எல்லையில்லாமல் நீண்டு கொண்டே போகும். கலை திறன்கள் சங்கமித்து ஒரு பெருங்கடலை உருவாக்கும் ஒரு முக்கிய இடமாக தமிழ் சினிமா விளங்குவதாக நடிகை நமீதா பிரமோத் தன் ஆழ்மனதில் இருந்து உணர்கிறார்.
மேலும் அவர் இதை பற்றி குறிப்பிடும்போது, "கலை மற்றும் தொழில்நுட்பம் என இரண்டிலும் தமிழ் சினிமா சிறந்து விளங்குகிறது. எங்கள் துறையில் உள்ள மற்றவர்களைப் போலவே, நானும் எப்போதும் தமிழ் சினிமாவின் கிரியேடிவிட்டியை கண்டு பிரமித்திருக்கிறேன்" என்றார்.
சமீபத்தில் நமீதா பிரமோத் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றதோடு, அவருக்கு பாராட்டுக்களையும் பெற்றுத் தந்த கம்மர சம்பவம் வெற்றியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் நமீதா பிரமோத். சித்தார்த், திலீப் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த இந்த படத்தில் நமீதா நடித்த 'பானுமதி' கதாபாத்திரம் கூடுதல் ஈர்ப்பாக திகழ்ந்தது.
தற்போது திலீப் உடன் ஒரு 3D படத்தில் இணைந்து நடிக்கிறார் நமீதா பிரமோத். இது பற்றி அவர் கூறும்போது, "இது ஒரு மிகப்பெரிய பரிசோதனை முயற்சியாகும். பெரிய அளவில் உருவாகி வரும் இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கொச்சியில் நிறைவடைந்துள்ளது. அடுத்தடுத்து கொச்சி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளது" என்கிறார்.
அவருடைய பெயர் வெளியில் தெரியும் முன்பே பலரையும் ஈர்த்தது அவரின் நடனம் சிறப்பான நடன திறமை தான். பாரம்பரிய நடனத்திற்கென தனியாக சிறப்பு பயிற்சி எடுத்தீர்களா? என்று கேட்டால், "சினிமாக்கள் மூலம் தான் நான் நடனம் கற்றுக் கொண்டேன். பிருந்தா மாஸ்டர், ஷோபி பால், தினேஷ் மற்றும் சிலர் மூலம் நடன திறமையை வளர்த்து கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postநடிகை ஸ்ரீப்ரியங்கா-வின் அழகிய புகைப்படங்கள்..!
