Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக vs அதிமுக தான்! - S.ve சேகர்.

On November 6, 2024
WhatsApp Image 2024-11-06 at 23.11.37
Share

தமிழ்நாடு அரசியல் களம் குறித்து பிரபல நடிகர் எஸ்.வி. சேகர் இன்று பல்வேறு கருத்துகளை செய்தியாளர்கள் சந்திப்பின் போது பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர்,"2026 சட்டமன்ற தேர்தல் மிகக் கடுமையாக இருக்கும். திமுக கொண்டு வந்துள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும், கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ஓட்டுகள் அவர்களுக்கு உள்ளது.

விஜய் வந்திருக்கிறார், அவருக்கு மிகப்பெரிய கூட்டம் வந்துள்ளது. அந்த கூட்டத்தை வாக்குகளாக மாற்ற வேண்டிய பொறுப்பு விஜய்க்கு உள்ளது. காமராஜர் மெரினாவில் கூட்டம் நடத்தியபோது ஒரு லட்சம் பேர் கூடினர். ஆனால் அந்த தேர்தலில்தான் காமராஜர் ஒரு கல்லூரி மாணவரிடம் தோல்வியடைந்தார். கூட்டத்திற்கும் வாக்குக்கும் சம்பந்தமில்லை. தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் திமுக vsஅதிமுக மட்டும்தான், மற்றவர்கள் யாரும் இல்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை அரசியல் போட்டி என்பது அதிமுக மற்றும் திமுகவிற்கு தான். மற்ற கட்சிகள் எல்லாம் ஓரமாக நின்று தனியாக விளையாடிக் கொண்டிருக்கலாம். விஜய்யின் வயதிற்கு இன்னும் 6,7 தேர்தல்களை சந்திக்கலாம். 2010 ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு 10 சதவீதம் கொடுக்க வேண்டும் என்று கேட்டவன்.
தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதி இருக்கிறது. இதில் 7 பேராவது பிராமணர்கள் எம்எல்ஏக்களாக இருக்க வேண்டும். இதை திமுக அறிவித்தால் திமுகவுக்காக தேர்தலில் பிரச்சாரம் செய்வேன். எந்த கட்சி அறிவித்தாலும் அந்த கட்சிக்காக பிரச்சாரம் செய்வேன் என்று கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.