Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழில் அடுத்துவர “A” படம், ஜெயிக்கிறகுதிர...

On October 6, 2017
Jeevan - Sakshi Agarwal - Aswini -Jeyikkira Kuthira
Share
Jeevan - Sakshi Agarwal - Aswini -Jeyikkira Kuthira “சினிமா பாரடைஸ்” மற்றும் “சரண் ஸ்டுடியோஸ்” இணைந்து தயாரிக்கும் படம் “ஜெயிக்கிறகுதிர”. இப்படத்தில் ஜீவன் கதாநாயகனாகவும், டிம்பிள் சோப்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், தலைவாசல் விஜய், கோவைசரளா, ரவிமரியா, சிங்கம் புலி, சித்ராலட்சுமணன், லிவிங்ஸ்டன், ரமேஷ்கண்ணா, மதன் பாப் யோகி பாபு, படவா கோபி, டி.பி.கஜேந்திரன், பாண்டு, ஏ.எல்.அழகப்பன், ரோபோசங்கர், இமான் அண்ணாச்சி, தீபா, ராமானுஜம், வையாபுரி, பவர்ஸ்டார், ஆதவன் ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இசையை கே.ஆர்.கவின்சிவா அமைக்க, கூல் ஜெயந்த் நடனத்தை இயக்கியுள்ளார். கலை பணியை மனிகார்த்திக் மேற்கொள்ள, சண்டை காட்சிகளை தளபதி தினேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தின் காட்சிகளை ஆஞ்சி ஒளிப்பதிவு செய்து படமாக்க, ரஞ்சித்குமார் எடிட் செய்துள்ளார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஷக்தி N.சிதம்பரம் இயக்கியுள்ளார். D.R.திரேஜா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் தணிக்கை சில நாட்களுக்கு முன்பு தான் தணிகை அதிகாரிகளால் தணிக்கை செயப்பாட்டு "A" சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை பற்றி இயக்குநர் ஷக்தி N.சிதம்பரத்திடம் படத்திற்கு “A” சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறதே? என்றோம். அதற்க்கு அவர் பதிலளித்ததாவது, “இந்த படம் சமீபத்தில் சென்சார் அதிகாரிகளால் பார்க்கப் பட்டு “A” சான்றிதழ் கொடுக்கப்பட்டது. இன்று இளைய தலைமுறை ரசிகர்களுக்கு பிடித்த காமெடி, காதல், கொஞ்சம் கிளாமர் போன்ற அணைத்து அம்சங்களும் இருந்ததால்தான் அவர்களிடம் படம் நல்ல வரவேற்பை பெரும். அப்படி அனைத்து அம்சங்களும் உள்ள படம் தான் இந்த ஜெயிக்கிறகுதிர. படம் தொடக்கம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக இருக்கம். படம் விரைவில் வெளியாக உள்ளது.” இவ்வாறு இப்படத்தின் இயக்குநர் ஷக்தி N சிதம்பரம் தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.