Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

"தமிழரசன்" படத்தில் 'புயலென வா' : மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்..!

On April 19, 2019
j1
Share

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கெளசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படம்  " தமிழரசன் " இந்த படத்தில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கிறார். நாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.

மற்றும் சுரேஷ்கோபி, ராதாரவி ,சோனு சூட்,யோகிபாபு,சங்கீதா கஸ்தூரி ரோபோ சங்கர், கஸ்தூரி சாயாசிங் மதுமிதா,ஒய்.ஜி.மகேந்திரன்,கதிர், ஸ்ரீலேகா, ஸ்ரீஜா, கே.ஆர்.செல்வராஜ்,சென்ட்ராயன் கும்கி அஸ்வின், மேஜர் கவுதம், சுவாமி நாதன்,  முனீஸ்காந்,த் ராஜ்கிருஷ்ணா, ராஜேந்திரன் ஆகியோருடன் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் மாஸ்டர் பிரணவ் நடிக்கிறார்..

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - பாபு யோகேஸ்வரன், தயாரிப்பு - கெளசல்யா ராணி, படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடை பெற்றது. இரண்டு கட்டமாக நடை பெற்ற படப்பிடிப்பு முடிவடைந்தது. அதிரடி ஆக்‌ஷன் படமாக தமிழரசன் உருவாகி வருகிறது.

இந்த படத்திற்காக இளையராஜா இசையில்

 ஜெயராம் எழுதிய

"பொறுத்தது போதும்

 பொங்கிட வேணும்

புயலென வா " என்ற புரட்சிகரமான பாடலை ஜேசுதாஸ் பாட இளையராஜா இசையில் பதிவானது.

2009ம் ஆண்டு மம்முட்டி நடித்த பழசிராஜா என்ற மலையாள படத்தில் பாடிய ஜேசுதாஸ் அதற்கு பிறகு எந்த சினிமாவிலும் பாடாமல் தவிர்த்து வந்தார். இந்த தமிழரசன் படத்தில் பாடியது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மரியாதை என்கிறது படக்குழு.

ஜேசுதாஸுக்கு பூங்கொடுத்து இளையராஜாவும் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் மற்றும் g.சிவா ஆகியோர் வரவேற்றனர். படத்தில் விஜய் ஆண்டனி பாடும் புரட்சிகரமான பாடலாக ஒலிக்கப் போகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.