தமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..!

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் 4 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி அவர்கள் அனைவரையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேர் மீதும் இலங்கையின் புதிய மீன்பிடிச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் கீழ் எல்லை தாண்டி மீன்பிடித்தால் 2 ஆண்டு சிறை தண்டனையும், பிடிபட்ட படகுகள், மீன்பிடி சாதனங்களை திரும்பப் பெற முடியாது எனவும் கூறப்பட்டுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
