தமிழக நிதி குறைப்பு : மத்திய அரசுக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை !

தமிழகத்துக்கான நிதி குறைந்தால் போராட்டம் நடத்துவோம் என்று மத்திய அரசுக்கு தமிழக நிதி அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2011 மக்கள்தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கும் திட்டத்துக்கு மத்திய அரசுக்கு கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டத்துக்கு எதிராக போராட தென் மாநிலங்களுக்கு கர்நாடகம் அழைப்பு விடுத்துள்ளது.
தென் மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்து சித்தராமையா கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் 2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு ஏற்புடையது அல்ல. தமிழகத்துக்கு ரூ20,000 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தின் நிதி தன்னாட்சி பேணி காக்கப்பட வேண்டும். நிதி பகிர்வு உயர்ந்தாலும் தமிழகத்துக்கான வருவாய் சரியாக கிடைக்கவில்லை. நிதி குறைந்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
