தமிழக அமைச்சர்கள் எல்லாம் முதலில் பள்ளியில் சேர்ந்து படித்து வர வேண்டும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதலில் பள்ளியில் சேர்ந்து படித்து வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று நடைபெற்ற திருமண விழாவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கலந்துகொண்டார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ”மோடி சொல்வதை யார் கேட்கிறார்களோ, அவர்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொசுக்களை ஒழிப்பதற்காக டெல்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவர்களை அழைப்போம் கூறியிருக்கிறார். கொசுக்களை ஒழிப்பது துப்புரவாளர்களின் பணி. தமிழக அரசின் கடமை. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை தருவதற்குத்தான் மருத்துவர்களை அழைக்க வேண்டும். ஆனால், அமைச்சர் சீனிவாசன் சம்பந்தமில்லாமல் கொசுக்களை ஒழிப்பதற்கு மருத்துவர்களை அழைப்போம் என்று பேசுகிறார். எனவே, தமிழக அமைச்சர்கள் அனைவரும் முதலில் பள்ளியில் சேர்ந்து படித்து வர வேண்டும்” என்றார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
