Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் "இனி சனிக்கிழமையும் வேலை"- உயர்நீதிமன்றம்..

On June 3, 2020
chennai_HC
Share

கொரோனா தொற்று பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக குறைந்த அளவில் ஊழியர்களை கொண்டு சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதனால், பணிச்சுமை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் என்று இருந்த பணி நாட்கள் ஆறு நாட்களாக அதிகரிக்கப்பட்டு சனிக்கிழமையும் நீதிமன்றம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் வெளியிட்ட அறிவிப்பில்,பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் தவிர்த்து, மற்ற அனைத்து சனிக்கிழமைகளிலும், சென்னை உயர் நீதிமன்றம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஒன்பது மாவட்ட நீதிமன்றங்களில் காணொலி விசாரணையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.