தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை மையம்..!

தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
மேலும்,வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் 10 செ.மீ., செஞ்சியில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 ,
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
