தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை வரவேற்கிறேன்.

பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் 27-ந் தேதி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும் கட்டண உயர்வை எதிர்த்து அனைத்து மாவட்டங்களில் ஜனவரி 24 ம் தேதி போராட்டம் நடத்த போவதாக பா.ஜ.,வும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டதை வரவேற்கிறேன் என்றார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் காவிரி பிரச்சனை தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
