Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமில்லை - அமைச்சா் செங்கோட்டையன்..

On May 30, 2020
158039058798747
Share

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளிகள் திறப்பு என்பது சாத்தியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகள் சம்பந்தமாக எந்தக் குழப்பமும் வேண்டாம். தனியாா் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என்றுதான் கூறினேன்.

தற்போது கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட நேரத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டும் தான் கல்வி கற்றுத் தர முடியும். எனவே ஆன்லைன் மூலம் பாடம் எடுக்க எந்தத் தடையும் இல்லை. மாணவா்கள் எந்தப் பள்ளிகளில் படித்தாா்களோ அந்தப் பள்ளிகளிலேயே தோர்வு எழுதலாம் என்றாா்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.