Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தமிழகத்திலும் தொடரும் வெற்றி தொடரும்- தமிழக பாஜக தலைவர்!

On December 18, 2017
bjp1
Share
bjp1 68 தொகுதிகளை கொண்ட ஹிமாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 9-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. 338 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்த தேர்தலில் 75.28 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. 42 மையங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பாஜக பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை பெற்றும், ஆளும் காங்கிரஸ் கட்சியானது பின்னடவை சந்தித்தும் வருகிறது. ஆட்சி அரியாசனத்தில் அமர தேவையான 36 இடங்களில் பாஜக சுமார் 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால், ஆளும் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது. bjpta இதையடுத்து ஹிமாசலப் பிரதேசத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றியை தமிழக பாஜக இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகிறது. அப்போது செய்தியாளர்களிடம் தமிழிசை பேசுகையில், ஹிமாசலப் பிரதேசத்தில் வெற்றி தமிழகத்திலும் தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.