தனியார் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து: கோவை...

கோவை ராமநாதபுரத்தில் பிரபல ஜெம் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இந்த மருத்துவமனை வெகு நாட்களாக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த தனியார் மருத்துவ மனையில் 5௦௦ மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் அறுவை சிகிச்சை பிரிவு அறையின் அருகில் உள்ள யுபிஎஸ் அறையில் இருந்து திடிரென மின் கசிவு ஏற்ப்பட்டுள்ளது. அந்த மின்கசிவால் மருத்துவமனை தீப்பற்றி எறிய ஆரம்பித்துள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக அந்த பகுதியில் இருந்த நோயாளிகளை அப்புறப்படுத்துவதில் செவிலியர்களும், மருத்துவமனை ஊழியர்களும் ஈடுபட்டனர்.
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த பணியில் நான்கு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
இதற்கிடையே தீ விபத்து நிகழ்ந்த பகுதியிலிருந்து மருத்துவமனையின் முதல் மாடிக்கு கொண்டு வரப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகள், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த தீ விபத்தினால் எந்த உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
