தந்தையை கொன்றவனை பழிவாங்கும் கதையாக "விஜய் 61" படம்!

இளைய தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படம் தந்தையை கொன்ற வில்லனை பழிவாங்கும் கதை என கூறப்படுகிறது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 61’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இம்மாத இறுதி வரை நடைபெறவுள்ளது. அதன்பின்னர் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் பிரான்ஸ் செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் கதை ‘தந்தையை கொலை செய்த வில்லனை பழிவாங்கும் இரண்டு மகன்கள்’ என்று கூறப்படுகிறது. இருந்தாலும் இப்போதைய ரசனைக்கேற்றவாறு ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதாக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
