தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலால் நடுவழியில் நிறுத்தப்பட்ட ரெயில்கள்!

நேற்றிரவு சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. இன்று அதிகாலை 2-30 மணிக்கு திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த கல்பட்டிசத்திரம் ரெயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கு தண்டவாளத்தில் அதிர்வு ஏற்படவே அதிர்ச்சியடைந்த என்ஜின் டிரைவர் சுதாரித்து ரெயிலை நிறுத்தினார்.
பின்னர் கல்பட்டி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு ரெயில்வே தொழிலாளர்கள் விரைந்து சென்று பார்த்த போது , அங்கு தண்டவாளத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதனை சரிசெய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை-செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் , நெல்லை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டன. தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டதை அடுத்து சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பிறகு ரெயில்கள் புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
