டெங்கு ஜுரமா? தினமும் ரூ.2 ஆயிரம் மருத்துவ உதவித் தொகை! -அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

டெங்கு காய்ச்சல் நோயாளிகளின் சிகிச்சைக்காக தினமும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர்,
''தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6.23 கோடியில் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் மூலம் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல்வரின் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இருந்து, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகளின் சிகிச்சைக்காக தினமும் ரூ.2 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்தக் காய்ச்சல் தமிழகத்தில் மட்டும்தான் இருப்பதாக எண்ணக்கூடாது, இது உலகமெங்கும் இருக்கிறது’’ என்றார்.
இதுகுறித்து காப்பீட்டுத் திட்ட அலுவலர் வட்டாரத்திலிருந்து கிடைத்த கூடுதல் தகவல்:- ஏற்கெனவே, டெங்கு பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை கட்டாயம் என்ற நிலையில் உள்ள நோயாளி மட்டுமே மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற முடியும். ஆனால், தற்போது டெங்கு பாதிப்பு இருப்பதாக ரிப்போர்ட் வந்தாலே மருத்துவk காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற முடியும். நோயாளி எத்தனை நாள் சிகிச்சை பெறுகிறாரோ அத்தனை நாட்களுக்கு மருத்துவமனைக்கு காப்பீட்டுத் திட்டத்தின் வாயிலாக இத் தொகை சேர்க்கப்பட்டுவிடும்!
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
